Tuesday, December 11, 2007

குர்ஆன் மென்பொருள்!

குர்ஆன் மென்பொருட்கள் பல கிடைத்தாலும் தொழில்நுட்பக் குறைகள் மிகைத்தே காணப்படுகின்றன. இச்சூழலில் முழுக்க முழுக்க யூனிகோடுத் தமிழ், அரபி, மற்றும் ஆங்கிலத்தில் இணைந்த அருமையான அதுவும் முற்றிலும் இலவச பதிப்பாக ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளும் வசதி கொண்ட இம்மென்பொருள் எனக்கு திருப்தியாக உள்ளது. நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்.


செய்முறை - 1 (சுட்டியை கிளிக்கி நிறுவிக்கொள்க)

QRFull4beta1.exe (13.2 MB)


செய்முறை - 2 (கீழுள்ள வசனங்களுக்கான சுட்டிகளை கிளிக்கி தானியங்கி முறையில் நிறுவிக்கொள்க)

QR-MP3-89to114.exe

QR-MP3-78to88.exe

QR-MP3-50to77.exe
QR-MP3-30to49.exe

QR-MP3-15to29.exe
QR-MP3-05to14.exe
QR-MP3-02to04.exe


செய்முறை - 3 (கீழுள்ள விருப்பமொழி சுட்டிகளை கிளிக்கி தானியங்கி முறையில் நிறுவிக்கொள்க)

QR Tamil.exe
QR Malayalam.exe
QR Urdu.exe



சிறப்பம்சங்கள்

- ஸாஅத் அல் ஹம்தி அவர்களின் அழகிய குரலில்
- தமிழ், அரபி, ஆங்கிலம் மற்றும் விரும்பிய 24 மொழிகளில்...
- தேர்ந்தெடுத்த வசனங்களையோ முழுக்குர் ஆனையோ அரபி ஒலியுடன் கூடிய தமிழ் எழுத்தில் பயனடையும் வசதி
- வார்த்தைக்கு வார்த்தை அர்த்தங்களைக் காட்டும் வசதி
- தமிழ் அர்த்தத்துடன் குர் ஆனை மனப்பாடம் செய்து கொள்ள அருமையான வசதி (Ctrl+R)
- முதல் இலவச பதிவிறக்க குர் ஆன் மென்பொருள்



நிறுவி துவங்கியபின் வரும் முதல் சாளரம் கீழ்க்கண்டவாறு கிடைக்கும்: இதில் உள்ள கீழ்நோக்கிய அம்பு (down arrow) குறியைப் படத்தில் காட்டியுள்ளவாறு கிளிக்கினால்...



























கீழே உள்ளவாறு யூனிகோடுத் தமிழில் அரபி ஒலியுடன் குர் ஆனைக் கேட்டு பார்த்து மகிழலாம். புதிய அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்!

(செயலியை இலவசமாக அளிக்கும் www.Shaplus.com தளத்தினருக்கு நன்றிகள்)




















பயன் தரக்கூடியதாகத் இருப்பின் இருவரிகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். தவிர சந்தேகங்கள் ஏதுமிருப்பின் எழுதுங்கள்.

2 comments:

Abu Umar said...

பதிவிறக்க தொடுப்புகள் மாற்றப்பட்டுள்ளனவா? சரி பார்க்கவும்.

அபூ ஸாலிஹா said...

தகவலுக்கு நன்றி அபூ உமர்!

செயலியை அளிக்கும் ஷா ப்ளஸ் தளத்திலிருந்து தொடுப்புகள் நகர்த்தப் பட்டுள்ளன.

மாற்றுவழியில் முயற்சி செய்கிறேன்.